பிரம்ரன் தமிழ் ஒன்றியம்-கனடா
வருடாந்தப் பொதுக்கூட்டம் - 2023
பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும் December மாதம் 10ம் திகதி (10-12- 2023) ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியிலிருந்து 9 மணிவரை 10150 The Gore Road, Brampton, ON L6P 0A6 இல் அமைந்துள்ள Gore Medows Community Center & Library, Community Room #1 இல் நடைபெறவுள்ளது. ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது சமூகமளிக்குமாறு ஒன்றியத்தின் சார்பில் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் இதுவரை அங்கத்துவத்தைப் புதுப்பிக்காத அங்கத்தவர்கள் மற்றும் புதிதாகஅங்கத்தவர்களாக இணையவிரும்பும் பிரம்ரன் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் தயவுசெய்து கீழுள்ள தொலைபேசி எண்ணுடன் அல்லது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொண்டு உரிய சந்தாப்பணத்தைச் செலுத்திப் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் அங்கத்தவர்களாகப் பதிவுசெய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
பிற்குறிப்பு: வீட்டு முகவரி, தொலைபேசி எண், அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ள அங்கத்தவர்கள் தயவுசெய்து நிர்வாகத்திற்கு அறியத்தருமாறும் பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின்சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி